108 ஐயப்ப சரண கோஷம் ! ! !

108 ஐயப்ப சரண கோஷம்

1.  ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
2. ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
3. ஓம் கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா
4. ஓம் சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே சரணம் ஐயப்பா
5.  ஓம் மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா
6. ஓம் வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா
7. ஓம் கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா
8. ஓம் பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
9. ஓம் சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
10. ஓம் வனதேவத மாறே சரணம் ஐயப்பா
11. ஓம் துர்கா பகவதி மாறே சரணம் ஐயப்பா
12. ஓம் அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா
13. ஓம் அனாத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
14. ஓம் அன்ன தானப் பிரபுவே சரணம் ஐயப்பா
15. ஓம் அச்சம் தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
16. ஓம் அம்பலத்து அரசனே சரணம் ஐயப்பா
17. ஓம் அபாய தாயகனே சரணம் ஐயப்பா
18. ஓம் அஹந்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
19. ஓம் அஷ்டசித்தி தாயகனே சரணம் ஐயப்பா
20. ஓம் அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
21. ஓம் அழுதையின் வாசனே சரணம் ஐயப்பா
22. ஓம் ஆரியங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா
23. ஓம் ஆபத் பாந்தவனே சரணம் ஐயப்பா
24. ஓம் ஆனந்த ஜ்யோதியே சரணம் ஐயப்பா
25. ஓம் ஆத்ம ஸ்வரூபியே சரணம் ஐயப்பா

26. ஓம் ஆனைமுகன் தம்பியே சரணம் ஐயப்பா
27. ஓம் இருமுடி ப்ரியனே சரணம் ஐயப்பா
28. ஓம் இன்னலைத் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
29.  ஓம் ஹேக பர சுக தாயகனே சரணம் ஐயப்பா
30. ஓம் இருதய கமல வாசனே சரணம் ஐயப்பா
31. ஓம் ஈடில்லா இன்பம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
32. ஓம் உமையவள் பாலகனே சரணம் ஐயப்பா
33. ஓம் ஊமைக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
34. ஓம் ஊழ்வினை அகற்றுவோனே சரணம் ஐயப்பா
35. ஓம் ஊக்கம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
36. ஓம் எங்கும் நிறைந்தோனே சரணம் ஐயப்பா
37. ஓம் எண்ணில்லா ரூபனே சரணம் ஐயப்பா
38. ஓம் என் குல தெய்வமே சரணம் ஐயப்பா
39. ஓம் என் குரு நாதனே சரணம் ஐயப்பா
40. ஓம் எருமேலி வாழும் கிராத -சாஸ்தாவே சரணம் ஐயப்பா
41. ஓம் எங்கும் நிறைந்த நாத பிரம்மமே சரணம் ஐயப்பா
42. ஓம் எல்லோர்க்கும் அருள் புரிபவனே சரணம் ஐயப்பா
43. ஓம் ஏற்றுமாநூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
44. ஓம் ஏகாந்த வாசியே சரணம் ஐயப்பா
45. ஓம் ஏழைக்கருள் புரியும் ஈசனே சரணம் ஐயப்பா
46. ஓம் ஐந்துமலை வாசனே சரணம் ஐயப்பா
47. ஓம் ஐயங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
48. ஓம் ஒப்பில்லா மாணிக்கமே சரணம் ஐயப்பா
49. ஓம்கார பரப்ரம்மமே சரணம் ஐயப்பா
50. ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா

51. ஓம் கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா
52. ஓம் கம்பன்குடிக்கு உடைய நாதனே சரணம் ஐயப்பா
53. ஓம் கருணா சமுத்ரமே சரணம் ஐயப்பா
54. ஓம் கற்பூர ஜ்யோதியே சரணம் ஐயப்பா
55. ஓம் சபரி கிரி வாசனே சரணம் ஐயப்பா
56. ஓம் சத்ரு சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா
57. ஓம் சரணாகத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
58. ஓம் சரண கோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா
59. ஓம் சபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
60. ஓம் ஷாம்புகுமாரனே … சரணம் ஐயப்பா
61. ஓம் சத்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
62. ஓம் சங்கடம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
63. ஓம் சஞ்சலம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
64. ஓம் ஷண்முக சோதரனே சரணம் ஐயப்பா
65. ஓம் தன்வந்தரி மூர்த்தியே சரணம் ஐயப்பா
66. ஓம் நம்பினோரை காக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
67. ஓம் நர்த்தன ப்ரியனே சரணம் ஐயப்பா
68. ஓம் பந்தள ராஜகுமாரனே சரணம் ஐயப்பா
69. ஓம் பம்பை பாலகனே சரணம் ஐயப்பா
70. ஓம் பரசுராம பூஜிதனே சரணம் ஐயப்பா
71. ஓம் பக்த ஜன ரக்ஷகனே சரணம் ஐயப்பா
72. ஓம் பக்த வத்சலனே சரணம் ஐயப்பா
73. ஓம் பரமசிவன் புத்திரனே சரணம் ஐயப்பா
74. ஓம் பம்பா வாசனே சரணம் ஐயப்பா
75. ஓம் பரம தயாளனே சரணம் ஐயப்பா

76. ஓம் மணிகண்ட பொருளே சரணம் ஐயப்பா
77. ஓம் மகர ஜ்யோதியே சரணம் ஐயப்பா
78. ஓம் வைக்கத்து அப்பன் மகனே சரணம் ஐயப்பா
79. ஓம் கானக வாசனே சரணம் ஐயப்பா
80. ஓம் குளத்து புழை பாலகனே சரணம் ஐயப்பா
81. ஓம் குருவாயூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
82. ஓம் கைவல்ய பாத தாயகனே சரணம் ஐயப்பா
83. ஓம் ஜாதி மத பேதம் இல்லாதவனே சரணம் ஐயப்பா
84. ஓம் சிவசக்தி ஐக்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
85. ஓம் சேவிப்போற்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
86. ஓம் துஷ்டர் பயம் நீக்குவோனே சரணம் ஐயப்பா
87. ஓம் தேவாதி தேவனே சரணம் ஐயப்பா
88. ஓம் தேவர்கள் துயரம் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
89. ஓம் தேவேந்திர பூஜிதனே சரணம் ஐயப்பா
90. ஓம் நாராயணன் மைந்தனே சரணம் ஐயப்பா
91. ஓம் நெய் அபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா
92. ஓம் பிரணவ ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
93. ஓம் பாப சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா
94. ஓம் பாயாசன்ன ப்ரியனே சரணம் ஐயப்பா
95. ஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
96. ஓம் வரப்ரதாயகனே சரணம் ஐயப்பா
97. ஓம் பாகவ தோத்மனே சரணம் ஐயப்பா
98. ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
99. ஓம் மோகினி சுதனே சரணம் ஐயப்பா
100. ஓம் மோகன ரூபனே சரணம் ஐயப்பா

101. ஓம் வில்லன் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
102. ஓம் வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா
103. ஓம் சத்குரு நாதனே சரணம் ஐயப்பா
104. ஓம் சர்வ ரோகநிவாரகனே .. சரணம் ஐயப்பா
105. ஓம் சச்சிதானந்த சொருபியே சரணம் ஐயப்பா
106. ஓம் சர்வா பீஷ்ட தாயகனே சரணம் ஐயப்பா
107. ஓம் சாச்வாதபதம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
108. ஓம் பதினெட்டாம் படிக்குடைய நாதனே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா!
சுவாமியே சரணம் ஐயப்பா!
சுவாமியே சரணம் ஐயப்பா!

நாங்கள் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சித்து அருள வேண்டும், ஓம் ஸ்ரீ சத்யமான பொண்ணு பதினெட்டாம் படிமேல் வாழும், ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் கலியுகவரதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா!

சுவாமியே சரணம் ஐயப்பா!

C.K-இன் வீடு

1990களில் பம்மல் சற்று ஆரவாரம் குறைந்த நகர்ப்புறம். அந்நாட்களில் ஒரு சிலருக்கே தெரிந்த ஊர் இந்த பம்மல். நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்களின் சொர்கம். இங்கிருந்து பலர் சென்னையின் பல பாகங்களில் வேலைக்கு சென்று வந்தனர். எப்பொழுதாவது வரும் பேருந்து என்பதால் அதில் எப்பொழுதும் கூட்டம் இருக்கும். வசதி படைத்தவர்கள் பேருந்தை தவிர்த்து தங்கள் இரு சக்கர வாகனத்தில், பல்லாவரம் சென்று மின்சார ரயிலை பயன்படுத்தி வந்தனர். காலை மற்றும் மாலை வேளைகளில், பல நூறு மிதிஉந்து (சைக்கிள்) மற்றும் இருசக்கர வாகனங்களை பம்மல் மெயின் ரோட்டில் பார்க்கலாம். ஆட்டோக்களும் ஏராளம். அன்றைய கால கட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தின் கனவு வீட்டை பற்றியே இந்த சிறு கதை.

C.K என்னும் சி.கார்த்திக் என்னுடைய பள்ளி காலங்களின் விளையாட்டு நண்பன். வயதில் மூன்று வருடம் சிறியவன். பல்வேறு தர மக்களின் வாழ்வாதாரமான பம்மலின் மத்தியில் முத்தமிழ் நகரில் இருந்தது கார்த்திக்கின் வீடு. அவனது குடும்பம் அன்றைய அளவான குடும்பம்.இவனது தந்தை விமானப்படையில் விருப்ப ஓய்வு (VRS) பெற்று குடும்பத்தை கவனித்து வந்தார். மிகவும் கண்டிப்பான மனிதர். தாயார் அருகில் உள்ள மகளிர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். கார்த்திக்கின் தம்பி இராமநாதன், செல்லப்பிள்ளை. அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆறு வருட இடைவெளி. தந்தை தினமும் பிள்ளைகளையும், மனைவியையும் தனது ஸ்கூட்டரில் பள்ளிக்கும், கல்லூரிக்கும் கொண்டு விடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். பெண்கள் குடும்பத்தை மட்டும் நிர்வகித்து வந்த அந்த நாட்களில், இந்த குடும்பம் முற்றிலும் வித்யாசமாக பலருக்கு தெரிந்தது. அந்த வீடு சுமார் ஒன்றரை கிரௌண்ட் நிலத்தில், சுற்றிலும் இடம் விட்டு, நடுவில் கட்டப்பட்டு இருந்தது.

வாருங்கள் அந்த வீட்டின் நினைவலைக்கு அழைத்து செல்கிறேன்.

அது புழுதி நிறைந்த சாலை. சிமெண்ட் ரோடு போடுவதாக சொல்லி கொண்டிருந்தார்கள். வீட்டை சாலையை விட மேடாகவே கட்டி இருந்தார்கள். வீட்டையும் சாலையையும் இணைக்க, ஸ்கூட்டரை இறக்க வசதியாக ஒரு சிமெண்ட் ஸ்லாப் பிரிட்ஜ் போட்டிருக்கும். மழைக்காலங்களில் அதன் அடியிலிருந்து தவளைகளின் சத்தம் காதை குடையும். அந்த சிமெண்ட் மேடையை ஏறி, சிறிய கிரில் கேட்டை கடந்தால் வலது புறத்தில் பாலாறு தண்ணி தொட்டி. அன்றைய சென்னை புறநகர் பகுதியில் வாழ்ந்து, வளர்ந்த மக்களுக்கு, இந்த தொட்டியின் தேவை நன்றாக தெரியும்.

கேட்-இல் இருந்து இருபதுஅடியை தாண்டினால் இரு தூண்களுக்கு இடையே அமைய பெற்ற போர்டிகோ. அங்கேயே எங்களின் கோடை மதிய விளையாட்டு மைதானம். வெயில் அதிகமா இருப்பதால் கார்த்திகை வெளியே அனுப்ப மாட்டார்கள். நாங்கள் அந்த போர்டிகோவிலேயே விளையாடுவோம். இரவு நேரங்களில், வண்டிகளை நிறுத்தும் இடம். அந்த நட்பு வட்டாரத்தில், இந்த இடத்தை பெரும்பாலும் என்னை தவிர, எவரும் தாண்டி உள்ளே செல்ல அனுமதியில்லை.

காம்பௌண்ட் கேட்டில் இருந்து வீட்டின் கதவு வரை சிமெண்ட்டால் ஆன பாதை. அதற்கு இருபுறங்களில் பூ செடிகளை நட்டு, அதனை கார்த்திக்கின் அப்பா கருத்தாக பராமரித்து வந்தார். இந்த செடிகளுக்கும், சுற்றுப்புற சுவருக்கும் இடையே நிழல் தரும் மரங்களும், வீட்டை சுற்றி தென்னை மரங்களும் நன்கு வளர்ந்து இருத்தன.

சுமார் 2400 சதுரஅடியில் கட்டப்பட்ட வீடு. வீட்டிற்கு பின்புறம் நிறைய காலி இடம் இருந்தது. வீட்டின் போர்டிகோவை தாண்டினால் ஒரு சிறிய அறை. பெரும்பாலும் அதில் ராமநாதனின் சைக்கிளும், எங்களின் விளையாட்டு சாமான்களுமே இருக்கும். அன்றைய காலகட்டத்தில் அனைத்து வகையான விளையாட்டு பொருட்களும், பல வகையான பந்துகளையும் வாங்கும் வசதி இந்த குடும்பத்தினிடமே இருந்தன.

கதவை தாண்டியவுடன் ஒரு அரண்மனைக்கு வந்த அனுபவம் எப்போதும் எனக்கு ஏற்படும். ஒரு பெரிய ஹால், அதில் ஒரு பெரிய டயனோரா டிவி, கூட வீசீஆர் (vcr).

நடுவில் கார்பெட் (carpet), அதை சுற்றி மரத்தால் ஆன சோபா செட், அதனிடையே டீ டேபிள். பல நாட்கள் அந்த டீ டேபிளை சுற்றியே செஸ் விளையாடிய ஞாபகம். நாங்கள் யாரும் சோபாவில் உட்கார அனுமதி இல்லை. நான் வளர்ந்து, நல்ல வேலைக்கு போன பிறகே அதில் உட்கார சொன்னார்கள்.

அந்த ஹாலின் முடிவில் பெரிய பெரிய அலமாரிகளில் புத்தகங்கள், மது பாட்டில்கள், கண் கவர் வண்ண பொம்மைகள் நிறைந்திருக்கும். அதை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பதில் கார்த்திக்கின் அப்பா மிக கவனமாக இருப்பார். ஹாலின் வலது புறத்தில், பெற்றோர்களின் படுக்கை அறை. டாய்லெட்டுடன் அமைந்த அறையாக இருப்பதாலும், அதில் A/C பொருத்தப்பட்டு இருப்பதாலும், அது எப்போதும் முடியே இருக்கும். பெரிய ஹாலாக இருப்பதால், அதனை சுற்றியே பெரும்பாலான அறைகள். அறை கதவுகளுக்கு முன்னர் இருந்த திரை சீலை, ஹாலின் அழகை மெருகூட்டியது. அடுத்த அறையும் படுக்கை அறையே. கார்த்திக்கும், ராமநாதனும் படிக்க, உறங்க, பிள்ளைகளின் அறை. ஒரு அறையில் குடும்பத்துடன் வாழ்ந்த, என் வீட்டில் இருந்து அந்த வீட்டை பார்த்தால், அது அரண்மனை தானே!!

பிள்ளைகளின் படுக்கை அறையை தொடர்ந்து உள்ள திரை சீலையை தாண்டினால் உணவு அறை. அதன் வலது புறத்தில் சமையல் அறை. உணவு அறையில் உள்ள டேபிளை சுற்றி எட்டு நாற்காலிகள். நடுவில் அழகாக அலங்கரிக்க பட்ட பழக்கூடை. நான் அந்நாட்களில் ஆப்பிளை பார்த்தது அங்கே தான். அவர்கள் சாப்பிடும் நேரத்தில் வீட்டில் யாருக்கும் அனுமதி கிடையாது. கோடை காலத்தில் கார்த்திக்கின் அம்மாவிற்கும் விடுமுறை என்பதால், எங்களுக்கு சில்லென்று ரஸ்னா கிடைக்கும். சில தின்பண்டங்களும் தரப்படும். சமையல் அறையில் அந்த கால கட்டத்தில் உள்ள அனைத்து வசதிகளும் இருந்தன. சமையல் அறையில் ஒரு அலமாரியில் பூஜை மாடம். வெள்ளிக்கிழமைகளில் பூஜை நடக்கும். அன்று, வீட்டை சுற்றி சாம்பிராணி போடுவார்கள். டைனிங் ஹாலை தொடர்ந்து குளியல் மற்றும் கழிப்பறை. கிணற்றில் இருந்து தண்ணீர் இழுத்து குளிக்கும் எனக்கு, அங்கே மழை போல பெய்யும் ஷவரை பார்த்தால், அதில் குளிக்க துடிக்கும் மனசு. வாஷிங் மெஷினும் அங்கேயே இருக்கும். பெரும்பாலும் அதில் கார்த்திக்கின் அப்பாவே துணிகளை தோய்த்து, காய போடுவார். அதனை தாண்டினால் பின்புற கதவு மற்றும் கிணறு. கிணற்றை கம்பிகளால் ஆன மூடி போட்டு இருப்பார்கள்.

வீட்டின் பின்புறம் முருங்கை, கொய்யா, மாதுளை, தென்னை, மாமரம் மற்றும் பல பழ செடிகள். அடர்த்தியாக செடிகள் இருப்பதால், இங்கே பாம்புகள் சுற்றி திரியும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை பெரியவர் ஒருவரை கொண்டு அந்த வீட்டின் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்வார்கள்; அவருக்கு ஒரு முழுநாள் வேலை என்றால் அந்த வீட்டின் சுற்றுப்புறத்தின் அளவை கற்பனை செய்து கொள்ளுங்கள். பாம்பை கண்டால், அதை சொல்ல இராமநாதன் என் வீட்டிற்கு ஓடி வருவான். பல பாம்புகளுக்கு, சொர்க்கத்திற்கும்/நரகத்திற்கும் வழி அமைத்து கொடுத்த பெருமை எனக்கு. இன்று உணவியல் சக்கரத்தில் பாம்பின் உரிமையையும், முக்கியத்தையும் நினைக்கும் போது கண்கள் கலங்கவே செய்கிறது. அன்றைய கால கட்டத்தில், அனைத்து வசதிகள் கொண்ட வீடாக மட்டும் இல்லாமல், நடுத்தர மக்களின் கனவு இல்லமாக, எனக்கு அரண்மனையாக தோன்றிய அழகிய குடும்பத்தின் கூடு அது.

இன்று, பம்மல் பெரும்பாலும் மாறிவிட்டது. நானும் வேலை நிமித்தமாக பல ஊர்களை பார்த்தாயிற்று, இருந்தும் மனதில் பசுமையாக அந்த வீட்டின் நினைவலைகள். அந்த வீடு முற்றிலும் இடிக்கப்பட்டு, பல அடுக்கு கொண்ட அபார்ட்மெண்டாக கட்டபட்டு கொண்டிருக்கிறது. அந்த வீட்டை கடந்து போகும் போது, அந்த ஒரு நிமிட வலி.. பின்பு மௌனம்… அதுவே அந்த வீட்டின் மேல் உள்ள என் காதலின் நிலை!

யார் சொன்னது முதல் காதல் இரு பாலுக்கும் என்று? தேவையின் அடிப்படையில் அமையும் ஆசை கனவே முதல் காதல் !!!

முதல் காதலை, இழந்த சோகத்தில் … நான் !!!

வாழ்க்கை கடல் .. சுமை !

சம்ஹார சாகரம் .. வாழ்க்கை கடல் என்னும் சுமை!!

ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார்.

ஒரு பறவை அவரிடம் சென்று பேசியது.
‘ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்’, என்றது.

‘பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா?முயற்சிப்பதில் தவறில்லை.
ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்.
பிரயாணத்தின் போது, முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு’, என்றார் சாது.

தலையசைத்து விட்டு பறந்தது பறவை.

பக்கத்தில் இருந்த சீடனிடம்
‘சீடனே! முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும்’,என்றார் சாது.

ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது.
‘ஐயா! கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன், சோர்வடைந்தேன்.
நீங்கள் சொன்ன படி உடனே திரும்பிவிட்டேன்.
பயணத்தை தொடர்ந்திருந்தால், கடலில் விழுந்திருப்பேன்.
இருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு என் முயற்சியை தொடர விரும்புகிறேன்’,என்றது பறவை.

‘பறவையே! இம்முறை உன் துணையையும் உடன் அழைத்துச் செல். பறக்கும் போது இரண்டாம் முறையாக சோர்வடைந்தவுடன், திரும்பி வா என்றார் சாது.

பதினைந்து நாட்கள் ஓடிப்போனது. மீண்டும் பறவைகள் திரும்ப வந்தன.
‘ஐயா! எங்களால் கடலில் நானூறு காத தூரம் தான் பறக்க முடிந்தது. நீங்கள் சொன்னபடி இரண்டாவது முறை சோர்வடைந்தவுடன் திரும்ப வந்துவிட்டோம்.
தொடர்ந்து பறந்திருந்தால் கடலில் விழுந்து இறந்திருப்போம்.
ஆனாலும் எங்கள் முயற்சியை தொடர விரும்புகிறோம். எங்களுக்கு உதவுங்கள்’, என்றது பறவை.

சாது யோசித்தார்.

கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து பறவையிடம் கொடுத்தார்.

‘பறவைகளே! பயணத்தின் போது இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.
சோர்வு ஏற்படும் போது, இந்தக் குச்சியை கடல் தண்ணீரின் மீது போடுங்கள்.
அது மிதக்கும்.அந்தக் குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள்.
களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறந்து செல்லுங்கள்’, என்றார் சாது.
பறவைகள் நன்றி சொல்லிவிட்டு பறந்தன.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு சாதுவிடம் வந்தன.
‘ஐயா! உங்களின் ஆசியினால், ஆயிரம் காத தூரத்திற்கு அப்பால் உள்ள தீவை சுற்றிப் பார்த்தோம்.
குச்சியின் உதவியால் சோர்வடையும் போதெல்லாம் ஓய்வெடுத்தோம்’, என்றது பறவை.
‘பறவைகளே அருமை! நீங்கள் எடுத்துச் சென்ற குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா?’என்று கேட்டார் சாது. . . . . . .

பறவை பேசியது.
‘ஐயா! சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம். சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம்.
அப்போதெல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது.
பல இடங்களில் எங்களுக்குள்ளே சண்டையும் வந்தது.
ஆனால், கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஓய்வெடுக்கும் போதுதான் “குச்சியை நாங்கள் சுமக்கவில்லை. குச்சிதான் எங்களை சுமக்கிறது, காப்பாற்றுகிறது”, என்ற உண்மை புரிந்தது’, என்று சொல்லி விட்டு பறந்தது பறவை.

சாதுவைப் பார்த்தான் சீடன்.
சாது பேசினார்.

‘சீடனே! பறவை முதலில் தனியாக பறந்த போது எளிதில் சோர்வடைந்தது.
துணையோடு பறந்த போது அதிக நேரம் சோர்வடையாமல் பறக்க முடிந்தது. அதற்குக் காரணம் ‘துணை’.

ஆனாலும் இலக்கை அடைய முடியவில்லை.
இலக்கை அடைய ‘குச்சி’ என்ற கருவி அவசியமாகிறது.
அந்தக் கருவி ஓய்வைக் கொடுத்தது, சண்டையைக் கொடுத்தது, பல நேரங்களில் சுமையாகத் தெரிந்தது.
ஆனால், அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய முடிந்தது.
பறவைகளுக்கு ‘குச்சியை’ப் போல மனிதர்களுக்கு ‘இல்லறம்’ கருவியாகிறது.

‘சம்சார சாகரம்’, என்ற பிறவிக் கடலை கடக்க, கடலில் குதிக்க வேண்டியதில்லை, நீந்த வேண்டியதில்லை.

‘இல்லறம்’ என்ற குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கலாம்’, என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.

குச்சியை சுமப்பதாக பறவைகள் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், ‘குச்சியே பறவைகளை சுமக்கிறது’.

இதைப் போல, கணவனும், மனைவியும் இல்லறத்தை வழி நடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், உண்மையில் இல்லறமே அவர்களை வழி நடத்துகிறது.

இதுவே இல்லற ரகசியம் !

— இணையத்தில் படித்த பயனுள்ள தகவல்.

தமிழ் மாதங்களின் புரிதல்

1, சித்திரை:
சித்-உயிர்,
திரை-மயக்கம்(மாலை)
உயிரின் மயக்கம்.

2, வைகாசி:
காசி-பிரபஞ்சம்,
வை-மனதை வை
பிரபஞ்சத்தில் மனதைவை.

3, ஆனி:
ஆ-ஆன்மா,
னி-மனதை வை
ஆன்மாவின் மனதைவை.

4, ஆடி:
ஆ-ஆற்றல்,
டி-இயக்கம்
பிரபஞ்சம் ஆற்றல் களம்

5, ஆவணி:
ஆவ-இயக்கம்,
இயக்கம் ஆனவன் நீ.

6, புரட்டாசி:
புரட்டு-திரும்பிப்பார்,
நீ உன் வாழ்க்கையை திரும்பிப்பார்.

7, ஐப்பசி:
ஐ-ஐம்புலன்களின்,
பசி-தேவை.
மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ஆகியவற்றின் தேவைகள்.

8, கார்த்திகை:
மனதின் ஆறுநிலைகளைக் குறிக்கும். மதவை, பழக்கம், சூழ்நிலை, பிறர்மனம் தூண்டல், கருஅமைப்பு, தெய்வீகம்.

9, மார்கழி:
பழையன மாறுதலும், தேவையற்றன கழிதலும்.

10, தை:
தை-இணைப்பு,
இறைவனோடு இணைதல்.

11, மாசி:
மா-இறைவன்,
ஆசி-ஆசி பெறுதல்,
இறைவனின் ஆசி பெறுதல்.

12, பங்குனி:
பங்குநீ, நீ-இறைவன்,
பங்கு-ஒருபாலும்,
இறைவனின் ஒருபாகம் மனிதன்.

ஆதித்ய ஹ்ருதயம் – Prayers to Sun (tamil lyrics – PDF to download)

ததோ யுத்தப் பரிச்ராந்தம் ஸமரே சிந்தயாஸ்திதம் 
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம் 

தைவதைச்சஸமாகம்ய த்ருஷ்டுமப்யாகதோ ரணம்
உபாகம்யாப்ரவீத்ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி:

ராம ராம மஹாபாகோ ச்ருணுகுஹ்யம் ஸநாதனம்
யேன ஸர்வானரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேன்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்

ஸர்வமங்கல மாங்கல்யம் ஸர்வபாப ப்ரணாசனம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தன முத்தமம்

ரச்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம்

ஸர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வீ ரச்மிபாவன:
ஏஷ தேவாஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபி:

ஏக்ஷ ப்ரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்த: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தனத: காலோ: யம: ஸோமோ ஹ்யமாம் பதி:

பிதரோ வஸவ: ஸாத்யா ஹ்யச்வினௌ மருதோ மனு:
வாயுர்வஹ்னி:ப்ரஜாப்ராண ருதுகர்த்தா ப்ரபாகர:

ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான்
ஸுவர்ண – ஸத்ருசோ பானுர்–ஹிரண்யரேதோ திவாகர:

ஹரிதச்வ: ஸஹஸ்ரார்சி: ஸப்தஸப்திர் மரீசிமான்
திமிரோன்மதன: சம்புஸ் த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான்

ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபனோ பாஸ்கரோ ரவி:
அக்னிகர்ப்போ அதிதே: புத்ர: சங்க: சிசிரநாசன:

வ்யோமநாத ஸ்தமோபேதீ ருக்யஜுஸ்ஸாமபாரக:
கனவ்ருஷ்டிரபாம் மித்ரோ விந்த்யவீதிப்லவங்கம:

ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்கல: ஸர்வதாபன:
கவிர்விச்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வபவோத்பவ:

நக்ஷத்ரக்ரஹதாராணா மதிபோ விச்வபாவன:
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசாத்மந் நமோஸ்துதே

நம: பூர்வாய கிரயே பச்சிமாயாத்ரயே நம:
ஜ்யோதிர்கணானாம் பதயே தினாதிபதயே நம:

ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோ நம:
நமோ நம: ஸஹஸ்ராம்ஸோ ஆதித்யாய நமோ நம:

நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:

ப்ரஹ்மேசானாச்யுதேசாய ஸூர்யாயாதித்ய வர்ச்சஸே
பாஸ்வதே ஸர்வ பக்ஷாய ரௌத்ராய வபுஷே நம:

தமோக்னாய ஹிமக்னாய சத்ருக்னாயாமிதாத்மனே
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:

தப்தசாமீகராபாய வஹ்னயே விச்வகர்மணே
நமஸ்தமோ பிநிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே

நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி:

ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஷ்டித
ஏஷ ஏவாக்னிஹோத்ரம் ச பலம் சைவாக்னிஹோ த்ரிணாம்

வேதாச்ச க்ரதவைச்சைவ க்ரதூனாம் பலமேவ ச
யானி க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு:

ஏனமாபத்ஸு க்ருச்ச்ரேஷு காந்தாரேஷு பயேஷுச
கீர்த்தயன் புருஷ: கச்சித் நாவஸீததி ராகவ:

பூஜயஸ்வை நமேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி

அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம்

ஏதச் ச்ருத்வா மஹாதேஜா நஷ்டசோகோ பவத்ததா
தாரயாமாஸ ஸுப்ரீதோ ராகவ: ப்ரயதாத்மவான்

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷமவாப்தவான்
த்ரிராசம்ய சுசிர் பூத்வா தனுராதாய வீர்யவான்

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோ பவத்

அத ரவிரவதந் நிரீக்ஷ்ய ராமம் முதித மனா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண:
நிசிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸுரகண மத்யகதோ வசஸ் த்வரேதி

இந்திய கலாச்சாரத்தின் பயன்கள் – குங்குமம்

இந்திய கலாச்சாரத்தின் பயன்கள்

இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் குங்குமப்பொட்டு வைத்துக்கொள்வது மங்களமானதாக கருதப்படுகிறது. அது அழகுத் தொடர்பானதும் கூட. மஞ்சளால் உருவாக்கப்பட்ட தூய்மையான குங்குமத்தை தான் வைத்துக்கொள்ள வேண்டும். குங்குமத்தை கழுத்தில் உள்ள கண்டம், புருவத்தின் இடைப்பகுதி, நெற்றியின் உச்சி போன்ற இடங்களில் வைத்துக்கொள்வார்கள். அப்படி பொட்டு வைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

வசியத்தில் இருந்து தப்பலாம்

வசியம் என்பது ஒரு கலை. இந்நாளில் மெஸ்மரிசம், ஹிப்னாடிசம், போன்றவை வழக்கத்தில் உள்ளன. மற்றவர்களை வசியப்படுத்தும் போது தம் பார்வை ஆற்றலை செலுத்த கண்டம், புருவத்தின் இடைப்பகுதி, வகிட்டு நுனி, கழுத்தின் பின்பகுதி ஆகிய இடங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

கழுத்தின் பின்பகுதி சடையால் மறைக்கப்படுகிறது. ஏனைய பகுதிகளில் பொட்டு வைத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளது. இதில் புருவ இடைப்பகுதி மிக முக்கியமாகும். இந்த இடத்தில் பொட்டு வைத்துக்கொண்டவர்களை அவர்கள் சம்மதம் இன்றி, எவராலும் ஆழ்நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது; வசியப்படுத்த முடியாது.

யோகசாஸ்திரம் கூறும் உண்மை

மூலாதாரம் என்று சொல்லப்படும் பகுதியில் இருந்து பிறக்கும் உள் ஒளி கண்டத்தில் தங்குகிறது. அவ்வொளி கபாலம் மூலம் புருவ மத்திக்கு வருகிறது. அகவொளி நிலைக்கும் இடங்களைப் பொட்டு வைத்து புலப்படுத்துவதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்கள் அனைவரும் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். திருமணமானவர்கள் என்பதை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக வகிட்டில் வைத்துக்கொள்வது மரபு. ஒட்டுப் பொட்டுக்களை இட்டுக் கொள்ளுதல் சாஸ்திரத்திற்கு முரனானது ஆகும்.

குங்குமம் ஒரு கிருமி நாசினி கூட…

நன்றி: தட்ஸ்தமிழ்

 

நான் யார்?

சிறை வைக்க நான் ஒன்றும் உருவம் இல்லை …

அடைத்து வைக்க நான் ஒன்றும் காற்று இல்லை …

நான் புகமுடியாத இடம் எங்கும் இல்லை !!

ஆம்…நான் தான், உன் எண்ணங்கள்… எண்ணங்களின் எழுச்சி !!!!